மத்தியப்பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வரும் நிலையில், அங்கு உள்ள ரத்லமில் 13-வது ஜூனியர் பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருந்து 400-க்கும் அதிகமான பாடி பில்டர்கள் பங்கேற்றனர். பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டியின் போது மேடையில் அனுமான் சிலை வைக்கப்பட்டிருந்தது. அப்போது அதன் முன் குறைந்த ஆடை அணிந்த பெண்கள் தங்களது உடலை முறுக்கி காட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதுகுறித்து ஆளும் பாஜக மீது காங்கிரஸ் தாக்குதல் நடத்தியது. வைரலாகும் வீடியோவில் பிகினி உடையணிந்த இளம்பெண் பாடி பில்டர்கள் தங்கள் தடகள உடலை முறுக்கி காட்டுவதை காணலாம். அதே நேரம் மேடையின் மீது அனுமான் சிலை நிறுவப்பட்டு உள்ளது. ஆகவே பாடி பில்டிங் போட்டியில் மேடையில் ஹனுமான் சிலை இருப்பதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிகச்சி ஆபாசமானது என குற்றஞ்சாட்டியது.