இந்தியாவில் இன்புளூயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதாக ஐசிஏஆர் தெரிவித்து உள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் முன்னாள் ஏய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, இன்புளூயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரசானது எச்1என்1 வைரசின் மாறுபாடடைந்த வைரஸ் என குறிப்பிட்டார்.

காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி ஆகியவை இதன் அறிகுறிகள் என தெரிவித்தார். H3N2 வைரஸ் கொரோனோ போன்று வேகமாக பரவும் என குறிப்பிட்டுள்ள அவர், முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் வலியுறுத்தி உள்ளார். அதோடு வயதானவர்கள் இதற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.