பான்கார்டை ஆதாருடன் இணைப்பதற்குரிய காலக்கெடு வரும் மார்ச்-31 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பு செயல்முறையை செய்யவில்லை எனில், நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான்கார்டு செயலிழந்து விடும் என அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் வருடத்தில் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைக்கும் ஆணையில் இருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த 4 பிரிவுகளில் யார் வருகின்றனர் என்பதை பின்வருமாறு காண்போம்.

# அதன்படி வட கிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா மற்றும் ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்கள்

# 1961ன் வருமான வரிச் சட்டத்தின் படி வசிக்காதவர்.

# 80 வயது (அ) அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்.

# இந்திய குடிமகன் அல்லாதவர்.