சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் திமுகவினர் விளக்கமளிக்க வேண்டும்.

இதையடுத்து தன் தரப்பு விவரத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக அண்ணாமலை கூறினார். அவரின் இந்த அறிவிப்புக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

48 மணிநேரத்தில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சொத்துப்பட்டியல் பற்றி தகவல் வெளியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கண்டிப்பாக நானும் வழக்கு தொடர்வேன். அதற்கு அவர் பதில் கூற வேண்டும் என தெரிவித்துஉள்ளார்.