தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தமிழுக்கு ஆட்சிய பங்களிப்பு குறித்த பாடம் வருகின்ற கல்வி ஆண்டில் 9-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது. இந்த அறிவிப்பை இன்று சட்டசபை கூட்ட நேரத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
ஏற்கனவே கலைஞர் கருணாநிதி எழுதிய தமிழ் செம்மொழி பாடல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்று இருந்த நிலையில் தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கலைஞர் கருணாநிதி குறித்த ஒரு பாடம் பாட புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது. மேலும் தற்போது புத்தகங்கள் அச்சிடும் பணி நடைபெறுவதாகவும் வருகின்ற கல்வி ஆண்டில் பாட புத்தகத்தில் இடம்பெறும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.