துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், 2024இல் பாஜக தமிழ்நாட்டில் ஒரு ஈர்ப்பை காண்பிக்கிறதோ,  அதற்கு தகுந்தபடி 2026இல் பாஜக அண்ணாமலையை ப்ராஜெக்ட் பண்ணும். ஒரு ஆளை ப்ராஜெக்ட் பண்ணுவது என்று சொன்னால்,  ராமதாஸ் கூட தான் அன்புமணியை  புரொஜெக்ட் பண்ணுகிறார்…. அன்புமணிக்கே கூச்சமாக போய்விட்டது.

அந்த முறையை துக்ளக் ஆண்டு விழாவில்  அழைத்திருந்தோம். அவருக்கு என்ன பண்ணுவது ? என தெரியவில்லை. அவரு தான் முதல்வர் வேட்பாளர் என PMK சொல்லிடுச்சு… தயாரிப்பு இல்லாத அண்ணாமலை அலோன்ஸ்  பண்ணுவது எந்த அளவிற்கு  ஊர்ஜிதம் என்பதில் பாஜக முதலில் தயாராக இருக்கணும். அவர்களுடைய தயாரிப்பு தான் முக்கியம். அண்ணாமலை ரெடி, கட்சி அப்படி என்பது பின்னாடி தான் பார்க்க வேண்டும்.

அதனால் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக வரவேண்டும் என்பதில் என்னை விட தீவிரமாக யாரும் இருக்க முடியாது. ஆனால் அதற்கு வேண்டிய தயாரிப்பு இல்லை என்றால்,  அதன் மூலமாக நல்லது நடக்குமா ? கெடுதல் நடக்குமா ? என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். ஆனால் என் மனதில்,  பாஜகவினுடைய வளர்ச்சி இந்த வருகிற இரண்டு ஆண்டில் எப்படி இருக்கிறதோ,  அதற்கு தகுந்த மாதிரி இந்த முடிவு இருக்கும் என தெரிவித்தார்.