இந்தியர்களின் சமயோசித புத்திக்கும் வினோதமான கண்டுபிடிப்புகளுக்கும் அளவே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு நபர் மாட்டுச் சாணத்தைக் கொண்டு செயற்கைக்கோள் கருவியான டிஷ் ஆன்டெனாவை உருவாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோவில், ஒரு நபர் தனது வீட்டின் மொட்டை மாடியில் பிளாஸ்டிக் வாலி மற்றும் ஒரு மரக்கட்டையைப் பயன்படுத்தி, அதில் உலர்ந்த மாட்டுச் சாணத்தை டிஷ் ஆன்டெனா போலப் பொருத்துகிறார்.
View this post on Instagram
அதன் பிறகு அந்த வினோத அமைப்பில் வயர்களை இணைத்துவிட்டு அறையினுள் சென்று தொலைக்காட்சியை ஆன் செய்யும்போது, அதில் சேனல்கள் மிகத் தெளிவாகத் தெரிவது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்த இணையவாசிகள், இந்தியர்களின் இந்த தேசி ஜுகாத் வித்தைக்கு ஈடு இணை ஏதுமில்லை என்றும், அமெரிக்கா போன்ற நாடுகளே இதைப் பார்த்து மிரண்டு போகும் என்றும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
