மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் நினைவேந்தல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துக்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதா ஆட்சியை நாங்கள் தான் அமைப்போம். யார் என்ன சொன்னாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டுவர தகுதி, வல்லமை எங்களுக்கு தான் உண்டு. அதை கொண்டு வர திறமை கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான். அவர் பின்னால் மொத்தம் இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளனர். 2001 ஆம் ஆண்டு மக்கள் மனநிலை தற்போது தமிழக அரசு எதிராக மாறி இருக்கிறது என்று அவர் கூறினார்.