இந்திய நேரத்தின் படி இன்று மாலை தொடங்கியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தல் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் வடகொரியா அரசு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை நடத்தி உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையேயான போர் சூழலில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ஆயுதங்களை அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்கரைனுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது.
அமெரிக்காவுக்கு மிக முக்கியமான எதிரியாக வடகொரியா இருந்து வருகிறது .இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் அன்று வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் நோக்கி அனுப்பி சோதனைசெய்துள்ளது. இந்த ஏவுகணைகள் சுமார் 400 கிலோமீட்டர் தூரம் சென்று கடலில் வேகமாக விழுந்ததாக தென் கொரியா, ஜப்பானும் உறுதி செய்துள்ளனர். உலகமே அமெரிக்கா அதிபர் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் பொழுது வடகொரியாவின் இந்த சோதனை மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.