இப்போது இசை பிரியர்களுக்கு என ஒரு சூப்பர் விற்பனையை அமேசான் நிறுவனமானது அறிவித்திருக்கிறது. அமேசான் பிராண்ட் என்றாலே அதற்கென பெரிய அளவிலான ஆன்லைன் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் இச்சிறப்பு அறிவிப்பை அமேசான் நிறுவனம் வழங்கி உள்ளது. வேர்ல்ட் மியூசிக் ஃபெஸ்ட் (World Music Fest sale) என்ற பெயரில் அமேசான் இந்த விற்பனையை அறிவித்து உள்ளது.

இதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த ஹெட்போன்கள், பார்ட்டி ஸ்பீக்கர்கள் மற்றும் சிறந்த பிராண்டுகளின் மியூசிக் புராடக்ட்களை 70% வரை தள்ளுபடியில் பெறலாம் என அமேசான் தெரிவித்து உள்ளது. அதோடு சாம்சங், சோனி, போட், டோசோ, ஸ்கல் கேண்டி, நாய்ஸ் ஆகிய பல்வேறு பிராண்ட்களுக்கும் நல்ல சலுகைகளை பெற இயலும். இந்த மியூசிக் சேல் இன்று ஜூன் 21 முதல் துவங்குகிறது. இதன் அதிரடி விற்பனையில் மிக பிரபலமான சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ இயர்பட்ஸை வெறும் ரூ. 16,990 விலையில் வாங்கலாம்.

சோனி WH-1000XM5 ஹெட்போன் மாடலை இச்சிறப்பு விற்பனையில் ரூ.24,990-க்கு வாங்கலாம். மேலும் இத்தள்ளுபடி வரிசையில் டோசோ டி6 இயர்பட்ஸ் மாடலை விற்பனை விலையில் ரூ.2,699-க்கு பெறலாம். கிரெடிட் மற்றும் டெபிட்கார்டு பயன்படுத்தி EMI முறையில் ரூ.5,250 வரையும் அதிக தள்ளுபடியை பெற இயலும். இதுதவிர்த்து 6 மாதங்களுக்கு Spotify பிரீமியமும் இலவசமாக வழங்கப்படுகிறது.