Airtel, Jio போன்ற 2 மொபைல் ஆப்ரேட்டர்கள் மட்டும்தான் நாட்டில் தற்போது 5ஜி சேவைகளை வழங்குகிறது. இத்திட்டம் பெரும்பாலான டேட்டா, OTT என்டேர்டைன்மெண்ட் மற்றும் குறைந்த விலையில் அன்லிமிடெட் காலிங் போன்றவற்றை வழங்குகிறது. ஜியோ, ஏர்டெல்லின் தினசரி 3ஜிபி டேட்டா திட்டத்தில் சிறந்ததாக இருப்பது எது என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.

ஜியோ ரூ.399

Jio-வின் 399 ரூபாய் கொண்ட இத்திட்டத்தின் கீழ் பயனர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் மேலே உள்ள திட்டத்தை போன்ற டேட்டா, காலிங் மற்றும் SMS போன்ற பலன்களை பெற இயலும். அதோடு இத்திட்டத்தில் JioTV சபஸ்க்ரிப்ஷன், ஜியோ சினிமா, ஜியோசெக்யுரிட்டி மற்றும் JioCloud ஆகிய சபஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.499

இது மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு இன்டர்நெட் பலன்களை வழங்குகிறது. பயனாளர்கள் தினமும் 3gp டேட்டா, அன்லிமிடெட் காலிங், sms மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி பெற முடியும். அதோடு பயனர்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான 3 மாத சந்தாவையும் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.399

இந்த ரீச்சார்ஜ் பிளான் ப்ரீபெய்டு டேரிஃப் பேக்கில் அடங்கி இருக்கிறது. இதன்கீழ் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இத்திட்டத்தின் சிறப்பு என்னவெனில் அதன் தினசரி டேட்டா நன்மை ஆகும். இதன் கீழ் தினசரி 3gp அதிவேக இன்டர்நெட் கிடைக்கும். அதன்படி, 28 தினங்களில் பல இன்டர்நெட் டேட்டாவானது கிடைக்கும். அதி வேக இன்டர்நெட் லிமிட் முடிந்தவுடன் இன்டர்நெட் வேகம் 64 Kbps ஆகிறது. இதில் தினசரி 100 இலவச sms வழங்குகிறது. இவையனைத்தும் இத்திட்டத்தில் கிடைக்கும் அடிப்படை நன்மைகள் ஆகும்.

மேலும் இந்த திட்டத்தில் நீங்கள் 15-க்கும் அதிகமான OTT இயங்குதளங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இவற்றில் Sony LIV, Lionsgate Play, Fancode, Eros Now, hoichoi, ManoramaMAX ஆகிய தளங்களும் அடங்கும். 28 தினங்களுக்கு உங்களது ஸ்மார்ட் போனில் முழுமையான பொழுதுபோக்கை அனுபவிக்க இயலும். இது தவிர்த்து இந்த ஏர்டெல் திட்டம் உங்களுக்கு இலவச Hello tunes சப்ஸ்க்ரிப்ஷன் வழங்குகிறது. இதன் வாயிலாக நீங்கள் விரும்பும் எந்த பாடலையும் உங்களது Hello Tune ஆக அமைக்கலாம்.