அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்ததால் அதிமுக அவர் வசமாகும் என்றுதான் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி விரைவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இருக்கிறார். ஓ. பன்னீர்செல்வம் எப்படியாவது மீண்டும் அதிமுகவை தன் வசப்படுத்தலாம் என போராடி வருகிறார். ஆனால் அதிமுக ஓபிஎஸ் வசம் வருவது கடினம் என்று தான் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம் சென்னைக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்திப்பது குறித்து ‌ நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால், காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைவேன் என்று கூறினார். அதன்பிறகு விரைவில் சசிகலாவையும் சந்திக்க இருப்பதாக கூறியுள்ளார். இதன் மூலம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் இணைந்து புதிய கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் 2024-ம் ஆண்டுக்குள் புதிய கட்சியையும் இவர்கள் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.