அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு இபிஎஸ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை எதிர்த்து யாரும் வேட்பமான தாக்கல் செய்ய மாட்டார்கள் என தெரிகிறது. இதனால் வருகின்ற 26 ஆம் தேதி ஈபிஎஸ் போட்டி இன்றி பொதுச் செயலாளராக தேர்வாக வாய்ப்புள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுகவின் உச்ச பதவியில் இபிஎஸ் அமர்கிறார்.

இந்நிலையில் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக தனது நிலைபாடு குறித்து இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் அறிவிக்க உள்ளார். இபிஎஸ்ஸுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை தொடர்வாரா அல்லது சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் கூட்டணி வைப்பாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார்.