சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு வகுப்புகள் நடைபெறும்.
மேலும் மார்ச் 13-ம் தேதி தொடங்கும் பொது தேர்வுக்கான அனைத்து தேர்வு மைய தயாரிப்பு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யுமாறு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.