தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சி தலைவர் அண்ணாமலை பேசும் போது, ஆரோக்கியமான அரசியலை பாரதிய ஜனதா கட்சி முன்னெடுக்கும் பொழுது சாமானிய மனிதர்கள் கூட இருக்கணும். ஊழலா ? பாரதிய ஜனதா கட்சி வந்தா வித்யாசமா பண்ணுவாங்களான்னு நீங்க கேட்கலாம் ? பண்ணித்தான் ஆகணும். இருப்பவர்கள் அப்படிப்பட்ட மனிதர்கள். இங்கு யாருமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் கிடையாது.
சிபி ராதாகிருஷ்ணன் அண்ணன் ரெண்டு மூணு தடவை எம்பியா இருந்திருக்கிறார்கள். இந்த மேடையிலே சில பேர் அங்கங்க அரசு பொறுப்பில் இருந்திருக்காங்க. இவர்கள் யாருமே சம்பாதிக்க வேண்டும். ஒரு குண்டூசி திருடிட்டாங்க என சொல்லக்கூடியவர் யாருமே இங்கே கிடையாது. பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கக்கூடிய தனித்தன்மை என்பது ஊழலை எதிர்க்கக்கூடிய தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான். மிச்சவங்க யாரும் பேச முடியாது. பேசினால் நீங்கள் யாரும் கேட்கவும், முடியாது. நீங்கள் என்ன கேட்க முடியும் ?
அவங்க சொல்றதுல என்ன உண்மை இருக்கும். நீங்களே ஊழல் பண்ணி இருக்கிற… இன்றைக்கு வந்து நீ ஊழலை எதிர்ப்பு சொன்னா யாரு கேப்பா ? என்று மக்கள் கேட்பாங்க. அதனால் இந்த நடை பயணம். ஏப்ரலுக்கும் மேல நாம போற இந்த நடைபயணம் கூட… 234 தொகுதிகளிலும் சாமானிய மனிதர்களை சந்தித்து, சாமானிய மனிதர்கள் சந்தித்து… அவர்களுக்கு இந்த ஊழலை பற்றி, மத்திய அரசினுடைய நல்ல திட்டத்தை பற்றி, மிக முக்கியமாக இந்த குடும்ப ஆட்சியினுடைய பிரச்சினை என தெரிவித்தார்.