வாட்ஸ் ஆப், டெலிகிராம்களில் IRCTC பெயரில் வரும் தளங்களை பயன்படுத்த வேண்டாம் என IRCTC எச்சரித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், irctc.creditmobile.site என்ற தளத்தின் வாயிலாக irctcconnect.apk என்ற போலி ஆப் ஒன்று வாட்ஸ் ஆப், டெலிகிராம்களில் பகிரப்படுகிறது. இதை ட்வுன்லோட் செய்தால், போனில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்படும். ‘IRCTC Rail Connect’ ஆப்தான் உண்மையானது என கூறப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் பிஎன்ஆர் நிலை, ரயில் பயணத்தின் போது உணவு ஆர்டர் செய்வதற்கும் பொதுமக்கள் ஐஆர்சிடிசி செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் IRCTC பெயரில் சந்தேகத்திற்கிடமான செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதன் வாயிலாக பல மோசடிகள் நடந்து தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த செயலியை பதிவிறக்குவதை தவிர்ப்பதோடு போலி செயலிகளுக்கு எதிராக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று ஐஆர்சிடிசி கேட்டுக் கொண்டுள்ளது.