கொரோனா வைரசின் வீரியமானது குறைந்து நம்மை விட்டு ஒழிந்து விட்டதாக நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் புது புது வடிவங்களில் நம்மை சுற்றிக்கொண்டு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. 2019 ஆம் வருடத்தின் இறுதியில் புயலை கிளப்பிய இந்த கொரோனா வைரஸ் 2020 ஆம் வருடத்தின் தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்க பிறகு உருமாற தொடங்கியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. அதன் பிறகு டெல்டா பிளஸ் என்ற இரண்டாவது மோசமான அலை உருவானது. இதில் தான் நிறைய உயிர்கள் பறிக்கப்பட்டது.

அதன் பிறகு 2021 ஆம் வருடம் ஓமைக்ரான் என்ற புதிய வடிவத்துக்கு மாறி அதனுடைய ஆட்டம் முடிவுக்கு வரத் தொடங்கியது. தற்போது இந்தியா முழுக்க எக்ஸ் பிபி.1.16 வகை வைரஸ் தான் மிக மிக வேகமாக பரவும் ஆற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதனால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்பது உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியது ஆறுதலான விஷயமாக மாறியது. இந்த வைரஸ் பாதித்தால் இரண்டு நாட்களிலேயே குணமாகிவிடும். இருப்பினும் கடந்த சில தினங்களாகவே இந்த வைரஸ் பரவல் கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பானது 12000 என்ற அளவில் இருக்கிறது.

இது 50,000 என்று அளவிற்கு கூட உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நிபுணர்கள் இதில் மாறுபட்டுள்ளனர். அதாவது மே மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் உச்சத்தை தொடும் என்றும் இன்னும் சுமார் பத்து நாட்களில் இந்த கொரோனா வைரஸ் உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. அதன் பிறகு இதனுடைய தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என யூடியூபர் வீடியோ ஒன்றை வெளியிட, அது வலைதளத்தில் வைரலானது. இதற்கு மத்திய அரசின் ‘PIB FACT CHECK’ விளக்கம் அளித்துள்ளது. லாக்டவுன் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுபோன்ற பொய் செய்திகளை நம்பவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.