உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌரி கர்வால் என்ற மாவட்டத்திலுள்ள கிராமங்களில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனப்பகுதியில் இருந்து தப்பி புலிகள் வசிப்படத்திற்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. 24 மணி நேரமும் புலிகள் தெருக்களில் நடமாடுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற அஞ்சுகின்றனர். அண்மையில் புலி தாக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புலிகளைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் உத்தரகாண்டின் கௌரி கருவால் மாவட்டத்தில் ரிகனிகள் மற்றும் துமகோட் ஆகிய பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி இயங்கும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் எனவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.