Airtel நிறுவனம் தன் வாடிக்கையாளர்களின் நலனுக்காக சிறந்த விலையில் கூடுதல் பலன்களுடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. Airtel தன் வாடிக்கையாளர்களை ஒரு திட்டத்தின் கீழ் 2 (அ) பல சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கிறது. Airtel பிளாக் என அழைக்கப்படும் இச்சேவையானது, ஏர்டெல்லின் மொபைல், டிடிஹெச் மற்றும் ஃபைபர் சேவைகளை ஒரே திட்டத்தில் இணைக்க பயனர்களை அனுமதிக்கிறது. மேலும் Airtel அதன் பயனாளர்களுக்கு நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோக்கள் ஆகிய பல்வேறு டிஜிட்டல் தளங்களின் இலவச ஓடிடி சந்தாக்களுடன், அன்லிமிடட் அழைப்பு மற்றும் இணைய நன்மைகளையும் வழங்குகிறது.

ஏர்டெல் பிளாக் ரூபாய்.1098 திட்டம்

பைபர் மற்றும் லேண்ட்லைன் இணைப்பை இணைத்து, பயனாளர்கள் 100 Mbps வேகத்தில் அன்லிமிடட் அழைப்பு மற்றும் இணைய நன்மைகளை பெறலாம். போஸ்ட் பெய்டு மொபைல் இணைப்பில் பயனாளர்கள் அன்லிமிடட் அழைப்புடன் 75gp டேட்டாவைப் பெறலாம். அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு இலவச சந்தாவை இத்திட்டம் வழங்குகிறது.

ஏர்டெல் பிளாக் ரூபாய்.1599 திட்டம்

பைபர், லேண்ட்லைன் மற்றும் டிடிஹெச் நன்மைகள் உடன் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் போன்றவற்றுக்கான இலவச சந்தாவுடன், 300 எம்பிபிஎஸ் இணைய வேகம் கிடைக்கிறது.