செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் என சொல்வதற்கான வாய்ப்பே கிடையாது. அதெல்லாம் தேவையில்லாம யார் யாரோ ஒரு கனவு உலகத்துல உக்காந்துகிட்டு கதை எழுதுற மாதிரி இது. எங்களைப் பொறுத்தவரை பாஜக மட்டுமல்ல. நாங்க ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.

பாஜகவோடு சேர்ந்து நின்றாலும் சரி,  பாஜக – அதிமுக தனியா நின்றாலும் சரி,  நாங்க அவங்க ரெண்டு பேரையும் உறுதியாக எதிர்ப்போம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். பாஜகவை விட்டு பிரிஞ்சிட்டு என்பதாலேயே அதிமுக நல்ல கட்சி என சொல்ல விரும்பல. ஏன்னா இவங்களுடைய ஆட்சியை நாம நல்லா அனுபவிச்சிருக்கிறோம். அதனால அவங்க ( அதிமுக ) பாஜகவில் இருந்து பிரிஞ்சு போறதுனால அவங்களோட நாங்க பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பே இல்லையே…

நாங்க இன்னைக்கு இந்திய அளவில் இந்தியா கூட்டணி என்பது சேர்ந்து,  திமுக உள்ளிட்ட கட்சி இணைந்து,  ஒரு கொள்கை ரீதியாக பாஜகவை முறியடிப்பதற்கு கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே திடீரென அதுல மாற்ற வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லையே. ஜவகர்லால் நேரு பிரதமராக இருக்கும் போது கூட,  அவங்க ஜவர்கலால் நேரு தான் பிரதமர் என்று குறித்து வைத்து ஓட்டெல்லாம் கேட்டது கிடையாது.

என்னைக்குமே ஒரு கட்சி அந்த கொள்கைகளுக்கு தான் ஓட்டு கேட்குமே தவிர,  ஒரு தனிநபரை முன்னிறுத்தி ஓட்டு கேட்பது என்பது நல்ல நடவடிக்கை அல்ல. ஏன்னா அந்த தனிநபர் நாளைக்கு போய்ட்டா என்ன பண்றது ? ஆகவே எங்கள் கூட்டணியை பொறுத்தவரை பிஜேபியை வீழ்த்தனும். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். இந்தியா கூட்டணியை வெல்லும் போது யாரு பிரதமர் ? இந்தியாவிலேயே பிஜேபியை வீழ்த்துவதற்கான கூட்டணியை சேர்ந்திருக்கும் போது, யாரு பிரதமர் என்பது தேர்ந்தெடுப்பது ? பெரிய பிரச்சனை வரப்போகுது. அதுல உட்கார்ந்து அரை மணி நேரத்துல பேசி முடிச்சுட்டு போயிடலாமே…  அதில் என்ன இருக்கு ? என தெரிவித்தார்.