செய்தியாளர்களிடம் தமிழக பாஜகவின்  மாநில தலைவர் அண்ணாமலை,  எனக்கு கிரவுண்ட் லெவல் பல்ஸ் தெரியுது. நான் கிரவுண்ட்ல இருக்கிற ஆளு. நான் எங்கேயுமே உட்காரதில்ல..  கம்ப்ளிட்டா கிரவுண்ட்ல ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம்… 10 மணி நேரம் அழுகுல… வியர்வையில் இருக்கின்றேன்.  என் கையெல்லாம் பாருங்க… இதெல்லாம் பாருங்க காயங்கள்.. மக்களோடு மக்களாக கிரவுண்ட்ல இருக்கிற ஆளு. எனக்கு பல்ஸ் தெரியும். நான் உறுதியாக இருக்கின்றேன். 2024க்கு மிக உறுதியா இருக்கேன்.

நான் மக்களை படிக்கிறேன், மக்களோடு இருக்கின்றேன், தினமும் 25 ஆயிரம் பேரை  60 நாட்களாக பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.  தமிழ்நாட்டுல எந்த அரசியல்வாதியும் இவ்வளவு மக்களை பார்க்கிறது கிடையாது. டீக்கடையில் போய் டீ குடிக்கிறேன்,  பேசுறேன். செருப்பு தைக்கிற அண்ணன் கிட்ட போய் பேசுறேன். பூக்கடை அக்கா கிட்ட பேசுறேன். நடந்து போகும்போது பேசுறேன். நான் பார்க்கிறேன் எனக்கு பல்ஸ் தெரியும். நான் புரிஞ்சுக்கிறேன். 2024 எலக்சன்ல ஒரு நம்பர் சொல்லி இருக்கேன். அது வருதா ? இல்லையா ? என்று நீங்க பாருங்க…

நானும் ஓரளவு படிச்சிட்டு தான் இந்த பதவிக்கு வந்து இருக்கிறேன். சில இடத்தில குறி வச்சா அது தப்பாது. 2024 பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் பாருங்கள். எனக்கு எழுச்சி தெரிகிறது. கிரவுண்ட்ல பல்ஸ் தெரியுது.  மக்கள் எந்த பக்கம் சாயுறாங்கன்னு தெரியுது. உங்க தகவலுக்காக சொல்கின்றேன் என கூறினார்.