நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடைசி ஈழ போர் 2008 -2009 இல் முடிவுக்கு வந்ததுமாதிரி, இந்த போர் தமிழ் பெருங்குடி மக்களுக்கு முன் வைக்கிற அரசியல் முழக்கம் உங்களுக்கு மொழி இனமா ? நீங்கள் சாதி மதமா ? இதான் கோட்பாடு. நீங்கள் மொழி இனமாக நிற்க போகிறீர்களா ? சாதி,  மதமாக  நிற்க போகிறீர்களா ? முதலில் தோன்றியது மொழியா ? சாதி, மதமா ?

மொழி இனமா ? சாதி,  மதமா ? முதலில் தோன்றியது மொழி. அந்த மொழியை பேசக்கூடிய மக்களின் இனம். அதற்கு பிறகு பிறகு பிறகு ரொம்ப பிறகு வெறும்  3000 ஆண்டுகள்…. அப்போதான் இந்த சாதி மத கோட்பாடுகள். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்,  பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற இந்த வர்ணாசிரம கோட்பாடு… இந்த சனாதன கோட்பாடு…. ஆரியர்கள் வருகைக்குப் பிறகுதான் இந்த நிலத்திற்குள் வாழ்ந்தது. 3000 வருசத்துக்கு முன்னாடி தான் ஜாதி,  மதம் வந்தது.

நான் 50, 000 ஆண்டுகளுக்கு மூத்தவன்.  தமிழ் பிள்ளைகள்  மொழி இனமாக நிற்க போகிறீர்களா ? சாதி மதமாக  நிற்க போகிறீர்களா ? நீங்கள் தமிழர்களா ? இல்லை திராவிடர்களா ? இந்தியர்களா ? தமிழர்கள் என்றால் ? என்னோடு வாருங்கள்…  திராவிட இந்தியர்கள் என்றால் எவனோடும் போங்கள். I don’t care about that அவ்ளோதான். That’s it ஒன்னும் கிடையாது. வந்தா வா… வரலைன்னா போ என தெரிவித்தார்.