அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, அரசு ஊழியர்களின் நலன் கருதி, அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்காக வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணம் உயர்த்தி உத்தரவிடப்பட்டது. இது 2023-24ஆம் நிதியாண்டில் இருந்தே அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொழில் முறை கல்விக்கு 250,000, கலை -அறிவியல் படிப்புக்கு 25,000, பல்தொழில்நுட்ப படிப்புக்கு 25,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முன்பணத்திற்கு வட்டி கிடையாது. அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி கற்க பணம் வழங்கப்பட்டதில் இருந்து அடுத்த 10 மாதங்களுக்கு சம்பளத்திலிருந்து தமிழக அரசு பிடித்தம் செய்யும்.