
ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எந்த நோக்கத்திற்காக புரட்சித்தலைவர் இயக்கத்தை உருவாக்கினார்கள்…. அந்த நோக்கம் சிறிதளவுகூட… சிறுகுண்டு மணி அளவு கூட குறைவு இல்லாமல் மாண்புமிகு அம்மா அவர்கள் வளர்த்து விட்டார்கள் மாபெரும் இயக்கமாக … புரட்சி தலைவர் அவர்கள் வருகின்ற பொழுது 15 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட நம் இயக்கம், மாண்புமிகு அம்மா அவர்கள் 30 ஆண்டு காலம் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று…
இந்த இயக்கத்தின் வேதனைகள், சோதனைகள், வழக்குகள் இதையெல்லாம் அம்மா அவர்கள் மனதார தாங்கி, இந்த இயக்கத்தை ஒன்றை கோடிக்கு மேற்பட்ட தூய தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக… எந்த கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக…. ஆண்ட கட்சி மீண்டும் ஆளுகின்ற உரிமையை 32 ஆண்டுகளுக்கு பெற்ற ஒரே தலைவராக… புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தை நல்லாட்சி நடத்திய முதலமைச்சராக வலம் வந்தார்கள் என்பதனை எல்லாம் நாம் எண்ணங்கள்… இதயங்களில் ஏந்தி, நாட்டு மக்களுக்கு நல்லது செய்கின்ற நாளிதழாக இந்த நாளிதழ் வர வேண்டும் என்று உங்களுடைய வாழ்த்துக்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக….
ஒரே கருத்தாக… அரசியல் பல்வேறு மனமாற்றங்கள் இருந்தாலும், இங்கு வெளியிடுகின்ற கருத்துக்கள் நாளை நம்முடைய புரட்சி தொண்டன் நாளிதழில் வருகின்ற கருத்துகள்… ஒவ்வொரு கருத்தும், ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு வரியும் தமிழக மக்களுடைய அடித்தளத்திலே இருக்கின்ற மக்கள், மேற்தட்டு மக்களுக்கு இணையாக தங்களுடைய வாழ்நாளை உருவாக்கி கொள்ளுவதற்கு உரிய கருத்துக்கள் உதிக்க பட வேண்டும் என்பதற்கு தான் இந்த புரட்சி தொண்டனுடைய பத்திரிக்கை நாளிதழினுடைய இலக்கு. அந்த இலக்கை நோக்கித்தான் இன்றைக்கு நான் இந்த நல்ல காரியத்தை ஆரம்பிக்க இருக்கிறோம் என தெரிவித்தார்.