மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நான் முதல்வராக இருந்த போது, கொரோனா வந்தது. சாதாரண கொரோனா இல்லை. நீங்கள் முகத்தை மறைத்து தான் உங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை. அந்த கொரோனா வைரஸ் கண்ணுக்கு தெரியாது. உலகமே அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட கொரோனாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டு, அந்த ”கொரோனா வைரஸ்” தொற்று அரவாக தமிழகத்தில் அகற்றிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம். அந்த கொரோனா வைரஸ் வந்தபோது மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி அறிகுறிகள் இருக்கும் என்று தெரியவில்லை.

அந்த காலகட்டத்தில் கூட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு நம்முடைய மக்களின் நல்வாழ்வுத் துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் என்னோடு இருந்து அண்ணா கவலை படாதீர்கள். எப்படிப்பட்டாவது மருத்துவரையும் செவிலியர்களையும் அனைத்து உதவியாளர்களையும் அழைத்து பேசி,

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து விலைமதிக்க முடியாத உயிரை காப்பாற்றுவோம் என்று சொன்னார்.அதிகாரிகளும் ஒத்துழைத்தார்கள், மருத்துவர்கள் ஒத்துழைத்தார்கள். தமிழகத்திலே விலைமதிக்க முடியாத உயிரை காப்பாற்றிய அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என தெரிவித்தார்.