தமிழகம் முழுவதும் மக்கள் பலரும் வாடகை ஆட்டோக்கள், கால் டாக்ஸி போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் . ஆனால் அதில் அதிக பட்டணம், சரியான நேரத்தில் புக்கிங் கிடைக்காதது உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஓலா, உபர் போன்ற தனியார் செயலி மூலமாக அதிகமாக ஆட்டோ மற்றும் கார்கள் இயங்கி வருகின்றன. ஆனால் அந்த நிறுவனங்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு கமிஷன் சரியாக கொடுக்காமல் இருப்பது அதிக சவாரிகளை கொடுப்பது என்று பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.

இதனால் இதை சமாளிப்பதற்கு தமிழக அரசு புதிய செயலி உருவாக்க உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். ஓட்டுநர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த பொழுது முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்து இருப்பதாக ஓலா, உபர் ஓட்டுநர்கள் தகவல் தெரிவித்துள்ளார்கள்.