
திமுக சமூக வலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர், இன்றைக்கு அதிமுக – பாஜக போன்ற வெகுஜனை விரோதிகளோடு மோதிக்கிட்டு இருக்கின்றோம். நேரடியாக மோதிக்கிட்டு இருக்கின்றோம். எப்படியாவது ஜாதியின் பெயரால்… மதத்தின் பெயரால்… பிளவு படுத்தி நாட்டினை நாசம் செய்ய நினைக்கக்கூடிய கூட்டத்திற்கு எதிராக நாம மோதிக்கிட்டு இருக்கோம்.
பாஜக உடைய சதி தன்மையை ஏதோ நம் நமக்கோ…. நம்முடைய இயக்கத்திற்கோ… கொள்கைக்கோ….. தமிழ்நாட்டுக்கு மட்டும் எதிரானது அல்ல, இந்தியாவுக்கும் எதிரானது. இப்படிப்பட்ட பாசிசவாதிகள் ஒரு பக்கம், இவர்களுடைய பாதம் தாங்கிகளாக இருந்து தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்த அடிமை அதிமுக ஒரு பக்கம்.
கொள்கையினா ஒரு கிலோ என்ன ? என்று கேட்கக்கூடிய கொள்கை அற்ற கூட்டம் தான் அதிமுக. இனிமே பாஜக உடன் இருந்தால் தமிழ்நாட்டு மக்களால் நிச்சயமாக புறக்கணிக்கப்படுவோம் என பயந்து அதிமுக – பாஜக உள்ளே வெளியே ஆட்டம் ஆடிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டை அழிக்க நினைக்கின்ற பாஜகவும் , அதிமுகவும் வேறு வேறு அல்ல. நாணயம் இல்லாத நாணயத்தின் இரு பக்கங்கள் இருவரும் என தெரிவித்தார்.