தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சத்தை கூகுள் மேப்ஸ் அறிமுகம் செய்துள்ளது. நான்கு சக்கர வாகன ஓட்டிகள் குறுகலான மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து அகலமான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சத்தை கூகுள் மேப் அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் தெருவின் அமைப்பு சாலையின் அகலம் போன்ற தகவல்களை அறியலாம். முதல் கட்டமாக சென்னை, கோவை, ஹைதராபாத், பெங்களூர், இந்தூர், போபால், புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
