அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி  ஸ்டேடியத்தின் புகைப்படங்கள் ரசிகர்களால் வெளியிடப்பட்டுள்ளது, தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டிக்கு ஆதரவு கிடைக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் ஆரவாரமின்றி தொடங்கியது. இந்தியாவில் அதாவது, சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான தொடக்க விழாவை பிசிசிஐ ஏற்பாடு செய்யவில்லை. மேலும், கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான முக்கியமான போட்டிக்கு பார்வையாளர்களின் ஆதரவு இல்லாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மைதானமான நரேந்திர மோடி சர்வதேச மைதானத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டிக்கு ஆதரவு கிடைக்காதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த அளவுக்கு நரேந்திர மோடி ஸ்டேடியம் ஹேஷ்டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் இது ஒருநாள் போட்டி என்பதால் மாலையில் இருந்தே பார்வையாளர்கள் மைதானத்திற்கு வர வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் நினைத்தனர். ஆனால் தற்போதும் கூட எதிர்பார்த்த அளவு இல்லை. கிரிக்கெட் ரசிகர்கள் 2019 உலக கோப்பையுடன் 2023 உலக கோப்பையை ஒப்பிட்டு, அதாவது மைதானத்தில் கூட்டத்தை அளவிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல மைதானத்தின் இருக்கைகள் தூசி மற்றும் பறவைகளின் எச்சங்களால் உள்ளது. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது. ஒருவர் வீடியோ வெளியிட்டு, இது பிசிசிஐ மற்றும் ஜெய் ஷாவால் நிர்வகிக்கப்படும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம். உலகக் கோப்பையைக் காண உலகின் மூலை முடுக்கிலிருந்து மக்கள் இந்தியாவுக்கு வந்தனர், இதுவே ஏற்பாடு. பறவைகள் எச்சம் (sh!t) செய்துவிட்டன மற்றும் அனைத்து தூசிகளும் நாற்காலிகளில் அமைக்கப்பட்டன. இன்று நடந்த ENG V NZ போட்டியின் நேரடி வீடியோக்கள் இது, #NarendraModiStadium இல் கூட்டம் இல்லாததில் ஆச்சரியமில்லை என பதிவிட்டுள்ளார்.

ஒருவர் எக்ஸ் பக்கத்தில், ஐசிசி  2023 உலக கோப்பைக்கு பொறுப்பான பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, இந்தியா நடத்தும் மிகப்பெரிய போட்டிகளின் தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மாநிலத்தில் உள்ள மைதானத்தின் 50% கூட நிரம்பியிருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. உங்களால் சரியாக நிர்வகிக்க முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள், இது ஒரு வார்ம்அப் போட்டி போல் தெரிகிறது” என தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை போட்டிகளை காண வந்த பார்வையாளர்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மகிழ்ச்சியான செய்தியை வழங்கினார். போட்டியை நேரலையில் காணவும், வீரர்களுக்கு ஆதரவளிக்கவும் பார்வையாளர்கள் மைதானங்களுக்கு வருவார்கள். அத்தகையோருக்கு மினரல் வாட்டர், பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் ஆகியவை முன்பு அறிவித்தபடி இலவசமாக வழங்கப்படும். குறிப்பாக குடிநீருக்காக ரசிகர்கள் பணம் செலவழிக்க தேவையில்லை என்று கூறினார்.

இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. பின்னர் நியூஸிலாந்து களமிறங்கி இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்து வருகிறது. துவக்க வீரர் யங் டக் ஆன போதிலும் டேவான் கான்வே மற்றும் ரச்சின் இருவரும் சிறப்பாக ஆடி இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்து வருகின்றனர். கான்வே சதமடித்துள்ள நிலையில், ரச்சின் சதத்தை நெருங்கி வருகிறார். நியூசிலாந்து  வெற்றிக்கு இன்னும் 83 ரன்கள் மட்டுமே தேவை.

https://twitter.com/hamxashahbax21/status/1709865321656701220

https://twitter.com/Politics_2022_/status/1709927586107928698