அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கில் வயதான புதுமண தம்பதிகள் என்ற கின்னஸ் சாதனையை படைத்த ஜோடி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தம்பதிகள் பெர்னி லிட்மேன் (100), மார்ஜோரி பிடர் மேன்(102). இவர்கள் சமீபத்தில் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் இளமைக்காலங்களில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். பின்பு அவர்களுக்கான தனித்தனி குடும்பங்களில் வசித்து வந்தவர்கள்.

சமீபத்தில் இருவரின் துணையுமே இறந்துள்ள நிலையில் இருவரும் பென்சில்வேனியாவில் ஒரு முதியோர் இல்லத்தில் சந்தித்துள்ளனர். இங்கு இருவருக்கும் காதல் மலர்ந்து தங்களது முதுமை காலத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பெர்னி  பேத்தி சாரா சிசேர்மன் தனது இணைய பக்கத்தில் தாத்தாவின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.