
அதிமுகவின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தென்காசி விவசாயம் நிறைந்த பகுதி… விவசாயிகள், விவசாய தொழில்கள் நிறைந்த பகுதி. பாருங்க அருமையா பச்சை துண்டு கட்டி இருக்காரு. அதுலாம் நம்ம ஜாதி.. நானும் விவசாயி. வரும்போது மகிழ்ச்சியா பார்த்தேன்…. ஆஹா நம்முடைய இனம் இங்கே இருக்கு… இங்கே இருக்கின்ற விவசாயிகள் பச்சை துண்டு அணிந்து வருகின்ற பொழுது கண்கொள்ளா காட்சி. வருகின்ற போதே மனசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இது ஏறு புடிச்ச கை…. மம்முட்டி பிடிச்ச கை…. அந்த விவசாயிகள் ஏற்றப்பட வேண்டும். அதற்காக அம்மா நிறைய திட்டங்கள் கொண்டு வந்தாங்க… இந்த விடியா திமுக அரசு எல்லா கிடப்பில் போட்டாங்க… விவசாயிகளுக்கு என்று ஒன்றுமே செய்யவில்லை… வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நான் முதலமைச்சராக இருந்த போது… அம்மாவுடைய அரசு 2248 கோடி கொடுத்தேன்.
அதேபோல பயிர் காப்பீடு திட்டத்தில் அந்த விவசாயி பயிரிட்ட பயிர் கருகின்ற பொழுது… பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே 9500 கோடி விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை பெற்று தந்து, நாட்டிலேயே அதிக இழப்பீடு தொகையை பெற்றுத் தந்த மாநிலம் தமிழ்நாடு. உங்களால் கொடுக்க முடிந்ததா ? இல்லை.
கொரோனா காலத்தில் 11 மாதம் விலையில்லாமல் அரிசி கொடுத்தோம், பருப்பு கொடுத்தோம் எண்ணெய் கொடுத்தோம், சர்க்கரை கொடுத்தோம், 11 மாசம் கொடுத்தோம். ஆயிரம் ரூபாய் பணமும் கொடுத்தோம். அது மட்டுமல்ல… இந்த கொரோனா காலத்துல… அந்த பெரியவர்கள்… மாற்றுத்திறனாளிகள்…. கர்ப்பிணி பெண்கள்… அப்படிப்பட்டவர்களுக்கு நாள் ஒன்றுக்கு அம்மா உணவகத்தில் இருந்து நாளொன்றுக்கு ஏழு லட்சம் பேருக்கு உணவு தயாரித்து கொடுத்தோம் என தெரிவித்தார்.