செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது இல்லை. இந்த முறையாவது வாழ்த்து சொல்வார் என்று பார்த்தால் ?  இந்த முறையும் இல்லை. அதற்கு பதிலாக அவர்கள் சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லி, ஆயுத பூஜையில் கடவுள் படத்தை வைத்து பூஜை செய்யக்கூடாது என்று ஒரு சர்குலர் கொடுத்தார்கள். அது பொதுமக்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.

பொதுமக்களின் அதிருப்தி கிளம்பியதற்கு பிறகு, அந்த சர்குலரை அவர்கள் வாபஸ் வாங்கிய பிறகு,  அதே திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சாமி படத்தை வைத்து பூஜை போட்டிருப்பது பொதுமக்களுக்கு  கிடைத்த வெற்றி. அவர்கள் வழிபாட்டு உரிமைக்கு கிடைத்த வெற்றியாக தான் நான் இதை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவர் இல்லத்திற்கு முன்பு வைக்கப்பட்ட கொடி கம்பத்தை தமிழக அரசாங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி காவல்துறை அதை அகற்ற முன்வந்தார்கள்.  அப்பொழுது எங்களுடைய பாரதிய ஜனதா கட்சியினுடைய நிர்வாகிகள் அதைக் கேட்க சென்றவர்கள் மீது மிகப்பெரிய கொடூரமான தாக்குதலை… லத்தி சார்ஜ் பண்ணி… கொடூரமான தாக்குதல் நடத்தி…. எங்களுடைய நிர்வாகிகள் இன்றைக்கும் மருத்துவமனையில் இருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம் என தெரிவித்தார்.