ஆளுநர் மாளிகையில்  நேற்று நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள நேற்று இரவு 10.30  மணியளவில் ஒரு செய்தி குறிப்பு வெளியாக்கியது. அந்த குறிப்பிலே பல்வேறு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.

சில கட்சி பெயரையெல்லாம் சொல்லி செய்தி குறிப்பு  வெளியானது.  இந்த நிலையில் ராஜ் பவன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிகாரப்பூர்வமான செய்தி போட்டு உள்ளார்கள். காவல்துறை இந்த புகாரை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக   நீத்து போகச் செய்துள்ளது என்ற குற்றச்சாட்டை சொல்லி உள்ளார்கள்.

அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி,  குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் ? பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணையை தவிர்க்கப்படுகிறது என்று சொல்லியுள்ளார்.

நியாயமான விசாரணை துவங்கும் முன்பே கொல்லப்படுகிறது என்ற முக்கியமான வார்த்தையை சுட்டிக்காட்டி செய்தி குறிப்பி வெளியிடப்படுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.