திமுக வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காந்தி பேசுகையில்,  சென்னை மண்டல பாக முகவர்கள் கூட்டம்… பயிற்சி பாசறை கூட்டம்… இது ஐந்தாவது…. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த கூட்டத்திலே கலந்து கொள்ள முடியவில்லை… நேரில் வர முடியவில்லை, உடம்பு சரியில்லை….  காரணம்  நம்ம எல்லோரும் சேர்ந்து அவருக்கு பிரார்த்தனை பண்ணுவோம்…

அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று முதல் கோரிக்கை…. நமது முதலமைச்சர்  எனக்கு இந்த பொறுப்பு  கொடுத்ததற்கு நிஜமாகவே நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் இது 37 தொகுதிகள்  சேர்ந்த முகவர்கள் கூட்டம். இதில் தலைவர் தொகுதியும் இந்த சென்னை மண்டல முகவர் கூட்டத்தில் சேருது. அதுமட்டும் இல்லாமல்  நமது இளைஞர் அணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின்  தொகுதியில் இந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் வரும்.

பொதுவாகவே காலையில் இருந்து நானும் பார்த்தேன் இந்த முகவர்களுக்காக எப்படி செயல்பட வேண்டும்  என்று நமது இளங்கோ அவர்கள் ஆரம்பித்து ஒன்று ஒன்றாக தெளிவாக எடுத்து கூறி இருக்கிறார்கள். இருந்தாலும் இன்னைக்கு இருக்கின்ற சூழ்நிலை…… மாண்புமிகு தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டே முக்கால் வருடம்  ஆக போகின்றது.  தேர்தலுக்கு முன் அவர் சொன்னார். நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார்.

அது மட்டுமில்லாமல் உங்கள் தொகுதியில் தளபதி…. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று சொல்லி ஒரு ஒரு தொகுதிக்கு வந்தும்…. ஒவ்வொரு மாவட்டத்திற்கு வந்து மனுக்கள் வாங்கி….  இதே மாதிரி மேடையில் போட்டி வைத்து….  அந்த பொட்டியில்  மனு வாங்கி போட்டு,  ஒன்று சொன்னார்….  நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாளைக்குள் இதை நிறைவேற்றி காட்டுவேன் என்று சொன்னார்…

எல்லாருமே கேலிக்கூத்தாக பேசினார்கள். இது எல்லாம்  முடியுமா ?  முடியாதா ? என்று….  அவர்கள் பேசுவது என்ன ? எனக்கே சந்தேகம் தான்…  என்ன நம்ம தலைவர் இஷ்டத்திற்கு பேசுகிறார் என்று….  தேர்தல் முடிந்தது. தேர்தல் முடிந்தவுடன் அதற்கு தனியாக ஒரு துறை போட்டார்.  100 நாளுக்குள்ள முடிந்து காட்டின ஒரு மகத்தான முதலமைச்சராக யார் என்றால்,  இவர்தான். அதற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை வந்துவிட்டது என பேசினார்.