
திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இப்போது பாஜகவும் – அதிமுகவும் புதிய நாடகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டது என்று ஒரு நாடகம். இது முதல் முறை கிடையாது. ஒரு ஒரு தேர்தலுக்கும் முன்பும் – பின்பும் அவுங்க இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்திட்டு தான் வராங்க.
மறைந்த அமையார் ஜெயலலிதா அவர்கள் தைரியமா கேட்டாங்க…. மோடியா ? இல்ல லேடியா?ன்னு அந்த அம்மா இறந்த பிறகு இந்த அடிமைகள் எல்லாம் என்ன சொன்னாங்க ? மோடி தான் எங்க டாடி என்று சொன்ன கூட்டம் தான் இந்த அடிமை கூட்டம்.
நீட் தேர்வு, ஜிஎஸ்டி, உதய் மின் திட்டம், தேசிய கல்விக் கொள்கை, வேளாண் விரோத சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் என ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த அத்தனை மக்கள் விரோத சட்டங்களையும் ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்ததுதான் இந்த அடிமை அதிமுகவினர்.
தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து பறித்து வந்த போதும்… 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, 2021 சட்டமன்ற தேர்தலின் போதும் தொடர்ந்து பாஜகவோடு இந்த அடிமைகள் கூட்டணி வைத்தார்கள். இது மக்களுக்கு தெரியும்.. இதையெல்லாம் செய்துவிட்டு, இன்றைக்கு தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்காக தான் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என்று பொய் சொல்கிறார்கள் என தெரிவித்தார்.