செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம்,  85 சதவீதம் இந்துக்கள் வாழக்கூடிய இந்த தமிழகத்தில்…. பெரும்பான்மை இந்துக்கள் இருக்கக்கூடிய பகுதிகளில் எந்த இஸ்லாமிய அமைப்போ, கட்சியோ, கொடியை ஏற்ற கூடாது என்று முடிவெடுக்குமா ? அப்படி ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தால்…  காவல்துறை அதற்கு உடன்படுமா ? இப்ப இந்துக்கள் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் நான் மேற்கொண்டு சொன்ன…

தமுமுக,  எஸ்டிபிஐ,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற இந்த கட்சியினர், இவர்கள்  அமைப்பினருடைய கொடிகளை எல்லாம் காவல்துறை எடுக்குமா ? அப்ப வேண்டும் என்று மத மோதலை  ஏற்படுத்த வேண்டும். தேர்தல் வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் என்பது இஸ்லாமியர்களுக்கும்,  கிறிஸ்தவர்களுக்கும் எதிராக இருக்கிறது என்று வாய் கூசாமல் திரு. ஸ்டாலின் அவர்களே  பேசுகிறார். அவர் முதல்வர் என்பதை மறந்து விட்டு பேசுகிறார்.

ஒரு பக்கம் ஹிந்து நம்பிக்கையை இழிவுபடுத்துவது, இன்னொரு பக்கம் ஹிந்து மக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களை தூண்டிவிடுவது. இந்த அரசியல் நாடகத்தை திரு.ஸ்டாலின் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எச்சரிக்கின்றோம். இஸ்லாமியர்களை பகடைக்காயாக பயன்படுத்தி கடந்த காலங்களில் இஸ்லாமியர்கள்…. கல்வியில்… பொருளாதாரத்தில்…  பின்தங்கியதோடு தீவிரவாதிகள்,  பயங்கரவாதிகள் என்ற முத்திரையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.