செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை. அதைப்போல தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கும் யாருடனும் பிரச்சனை இல்லை. அதனால் இதில் எந்த பிரச்சனையும் இருப்பதாக நான் பார்க்கலை. மத்தபடி அவங்க கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொல்ற நிலைமையில் இல்ல,  நான் சொல்லவும் முடியாது.

செல்லூர் ராஜா அண்ணா கேக்குற கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்லுவேன் ? நான் சொல்ல முடியாது. அது தேசிய தலைமையும், தேசியத் தலைவரும் சொல்லணும். அதேபோல சில அதிமுகவின் மூத்தலைவர்கள் ரெண்டு மூணு நாளா பேசி இருக்காங்க. அதுக்கு நான் பதில் சொல்ல முடியாது. அதுக்கு தேசிய தலைவர்கள் இருக்காங்க….  NDA கூட்டணி இருக்கு.

NDA மீட்டிங்க்கு எடப்பாடி அண்ணன் போறாங்க…  பிரதம மந்திரி இருக்காங்க. எங்களுடைய தேசிய தலைவர் இருக்காங்க. அங்க அவுங்க ஒரு முடிவு எடுக்கட்டும். என்னைய பொறுத்தவரை நான் தெளிவாக இருக்கின்றேன். பிரதமர் மோடியை யாரெல்லாம் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ…  அவர்களெல்லாம் ஒரே மையப் புள்ளியில் இணைய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கோம் என தெரிவித்தார்.