டி ஆர் பாலு கொடுத்து அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆஜரானார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, DMK Files 2 இல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம் என்று புதிய குண்டை போட்டுள்ளார். தமிழகத்தில் முதல் தலைமுறைக்கும் மூன்றாவது தலைமுறைக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வருகின்றது.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என்று பாஜக அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சமீபத்தில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை பாஜக அண்ணாமலை வெளியிட்டிருந்த நிலையில் இரண்டாவது பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.