ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ..

ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. விண்கலத்தில் புற ஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கி எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ. சூரியனை சுற்றியுள்ள குரோமோஸ்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலை நீளத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகின.

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் முதல் முறையாக சூரியனுடைய குரோமோஸ்பியர் மண்டலத்தை எடுத்துள்ள இந்த புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாகவும், வித்தியாசமான கோணத்திலும் இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 20ஆம் தேதி SUIT தொலைநோக்கி ஆன் செய்யப்பட்ட நிலையில் 2வது புகைப்படத்தை வெளியிட்டுள்ளது
6ம் தேதி ஒளி புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், தற்போது சூரியனின் முழு தோற்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் அனுப்பப்பட்டது.