அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளின் அளவிற்கு கட்டட வசதி இல்லாத காரணத்தால் தான் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பணிகளில் குழந்தைகளை சேர்ப்பதற்கு யோசிக்கிறார்கள். கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு காலத்தில் 250 மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 24 மாணவர்கள் மட்டுமே படித்து வருகிறார்கள். பள்ளியின் சுற்றுச்சுவ்ரானது விரிவடைந்து பாதுகாப்பானதாக இல்லை எனவும் சரியான எண்ணிக்கையில் ஆசிரியர்களுக்கு போதுமான கழிப்பறை வசதி இல்லை எனவும் பெற்றோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு கொடுத்தால் கட்டடத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்தலாம். எனவே பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த சரியான நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் வரும் டிசம்பர் 28ஆம் தேதி மாநிலத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.