நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் வேதாரண்யம் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்தது. அதனை மறித்த காவல்துறையினர் அதில் சோதனை செய்தனர்.

அப்போது காரில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனே காரில் வந்த நபரிடம் விசாரணை நடத்திய போது  அவர் ஆந்திர மாநிலம் மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடகிருஷ்ணா என்பது தெரியவந்தது. அதோடு கஞ்சா பொட்டலங்கள் ஆந்திராவில் இருந்து வேதாரண்யத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும், தற்போது அதனை இலங்கைக்கு கொண்டு செல்வதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த நபரை கைது செய்த காவல்துறையினர் காரில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். அதன் பின் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மேலும் கஞ்சா பொட்டலங்களை ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சி செய்ததாக வெங்கடகிருஷ்ணா என்பவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.