பிரபல பிரிட்டிஷ் லக்ஷரி கார் தயாரிப்பு நிறுவனமான அஸ்டின் மார்டின் மற்றும் குழந்தைகளுக்கான ஸ்ட்ரோலர்களை உருவாக்கும் பிரபல பிராண்ட் எக் ஆகியவை இணைந்து, ஓர் அழகும், ஆடம்பரமும் நிறைந்த புதிய “அஸ்டின் மார்டின் எக்3” ஸ்ட்ரோலரை அறிமுகப்படுத்தியுள்ளன. குழந்தை ஸ்ட்ரோலருக்கே “அஸ்டன் மார்டின் சீட்” போல இருக்கை வடிவமைப்பு, கார் சீட் பெல்டைப் போன்று ஹார்னஸ், மற்றும் காரின் லோகோக்கள் இடம்பெற்றுள்ளன.
High Performance Meets Parenthood.
Introducing the Aston Martin egg3® from @BabyStyle_UK.
Born from a synergy between two icons of British craftsmanship, combining precision engineering with timeless design.#AstonMartin pic.twitter.com/2sqns2mGZR
— Aston Martin (@astonmartin) September 9, 2025
இந்த ஸ்ட்ரோலர் வெள்ளை, சாம்பல் மற்றும் பச்சை என மூன்று கலர்களில் கிடைக்கிறது. SPF50+ பாதுகாப்புடன் கூடிய பெரிய கானோபி, மூன்று வகையான இருக்கை நிலைகள், சீரமைக்கக்கூடிய தலை தாங்கி, ஐந்து நிலைகளில் மெருகூட்டிய ஹேண்டில்பார், மற்றும் மறைந்த சேமிப்பு இடம் என பல வசதிகளை கொண்டுள்ளது. குழந்தை பிறந்த நாளிலிருந்தே 55 பவுண்டுகள் வரை எடையுள்ள குழந்தைகள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“High Performance Meets Parenthood” என X-யில் அஸ்டன் மார்டின் இந்த கூட்டணியை பறைசாற்றியுள்ளது. உலகளாவிய அறிமுகம் செப்டம்பர் 9-11 வரை ஜெர்மனியின் கொலோனில் நடைபெறும். இது இந்த குளிர்காலத்தில் UK மற்றும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சந்தைகளில் விற்பனைக்கு வரும்.
