தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் மம்தா மோகன் தாஸ். இவர் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை மம்தா மோகன்தாஸ் நயன்தாரா பற்றி சொன்ன ஒரு விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குசேலன் திரைப்படத்தில்  மம்தா மோகன் தாஸ் மற்றொரு ஹீரோயினாக நடித்துள்ளார். அப்போது துபாயில் ஷூட்டிங்கில் இருந்த நிலையில் ரஜினி பட வாய்ப்பு என்றவுடன் உடனே கிளம்பி வந்திருக்கிறார் மம்தா. படத்தை இயக்கும் ஒரு பெண்ணாக குசேலன் படத்தில் மம்தா நடித்த நிலையில் நடிகர் ரஜினி அவரிடம் ஒரு பாடலுக்கு நடனமாடுமாறு கூறியுள்ளார்.

மம்தாவை ரஜினி தான் நடிக்க வைத்துள்ளார். ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது மம்தாவின் காட்சிகள் குசேலன் படத்தில் இல்லாததால் அவர் மிகவும் அதிர்ச்சியாகியுள்ளார். குசேலன் படத்தின் ஹீரோயின் மம்தா மோகன் தாஸ் அந்த படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என கூறியதால் மம்தாவின் காட்சிகளை படக்குழுவினர் நீக்கியதாக அவரிடம் ஒருவர் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் நயன்தாரா இன்னொரு ஹீரோயின் இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என கூறியது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நயன்தாரா விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.