போஜ்பூரி நடிகை அஞ்சலி ராகவ், லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பவான் சிங் தன்னுடைய இடுப்பை தவறாக தொடும் வீடியோ ஒன்று வைரலானபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சமீபத்தில், இருவரும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது பவான் சிங், அஞ்சலி இடுப்பை அவசியமின்றி தொட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனை அஞ்சலி கண்டித்து, அவர் போஜ்பூரி சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
View this post on Instagram
இந்த சம்பவத்திற்கு பிறகு அஞ்சலிக்கு, பலரும் “நீங்கள் ஏன் உடனே பதிலளிக்கவில்லை? ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்கவில்லை?” என்ற கேள்விகளுடன் அவரை குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த அஞ்சலி கூறியதாவது, “நான் அப்போது மிகவும் கவலைப்பட்டேன். பவான் என்னுடைய இடுப்பை தொடுவதை நான் முதலில் கவனித்தேன், ஆனால் அதை ஒரு தவறாக எடுத்துக் கொண்டேன். அப்போது சிரித்தேன், ஆனால் பின்னர் உண்மையில் என்ன நடந்தது என புரிந்து கொண்டேன்.”
இது குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது, “எனது அனுமதியின்றி யாரும் எனது உடலை தொடுவது நான் ஒருபோதும் ஏற்க முடியாது. இது மிகவும் தவறான செயல். நான் போஜ்பூரி சினிமாவில் இனி பணியாற்ற மாட்டேன். எனக்கு என் குடும்பம் மற்றும் என் ஹரியானா என்னைச் சுற்றி இருப்பதும் மிக முக்கியம்.”
