விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது விஜயின் அடுத்த படம் குறித்து அரசால் புரசலாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இப்போது ஹிந்தியில் அனிமல் என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார் அந்த படத்தை முடித்த கையோடு தளபதி 68 திரைப்படத்தை சந்திக்க அதிக வாய்ப்பு உள்ளது. அண்மைக்காலமாக தெலுங்கு இயக்குனரை நம்பி டாப் நடிகர்கள் மோசம் போய் உள்ளதால் குழப்பம் அடைந்துள்ளனர்.
