தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிப்பதாக தகவல்கள் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அது குறித்து அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது லியோ படத்தில் பணி புரியும் இயக்குனர் ரத்தினகுமார் விக்ரம் படத்தில் வரும் விஜய் சேதுபதியின் உடைந்த கண்ணாடியை வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி லியோ படத்தில் நடிக்கிறார் என்று கூறி வந்தார்கள். ஆனால் தற்போது நடிகர் விஜய் சேதுபதி தான் லியோ படத்தில் நடிக்கவில்லை எனவும் இது போன்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சில பெரிய பத்திரிகை நிறுவனங்கள் எங்களை எளிதாக அணுக முடியும். ஆனால் அவர்களும் எங்களை அணுகி எதுவும் கேட்காமல் இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.