நடிகரான சயிப் அலிகான் மும்பை பாந்தாரா பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் சயிப் அலிகானை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். இச்சம்பவத்தில் தானேவில் பதுங்கியிருந்த முகமது என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரது உண்மையான பெயர் விஜய் தாஸ் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் பெயர் முகமது ஷரீஃபுல் இஸ்லாம் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதில் சட்டபூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லாமல் அவர் இந்தியாவில் இருந்துள்ளார். மேலும் கொள்ளை அடிப்பதற்காக வீட்டில் நுழைந்ததாகவும் தான் ஒரு நடிகரின் வீட்டில் நுழைகிறோம் என்றும் அவருக்கு தெரியவில்லை என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இதில் முதல் கட்ட விசாரணைக்கு பிறகு முகமது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு குற்றவாளிகள் அமரும் பின் வரிசையில் முகமது அமர வைக்கப்பட்டிருந்த போது அவருக்காக வாதாட முன் வருவதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் அவரிடம் வக்காலத்து பத்திரத்தில் கையொப்பம் பெற முயன்றார். அதே சமயத்தில் அங்கு வந்த மற்றொரு வழக்கறிஞர் தான் முகமதுக்காக வாதாடுகிறேன் எனக்கூறி அவரிடம் வக்காலத்து பத்திரத்தில் கையொப்பம் பெற்றுவிட்டார். இதனால் இரு வழக்கலைஞர்களும் இடையில் யார் முகமதுக்காக சண்டை போட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இருவரையும் முகமதுக்காக வாதாட அனுமதித்து மாஜிஸ்திரேட் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். இதற்கிடையில் நீதிமன்றம் முகமதுவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. மேலும் வக்காலத்து பத்திரம் என்பது குற்றம் சாட்டப்பட்டவருக்காக வாதாடும் அதிகாரத்தை வழக்கறிஞர்களுக்கு கொடுக்கும் சட்டபூர்வ ஆவணம் ஆகும்.