தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 21-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை சாய் பல்லவி நடிகை இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயந்துள்ளார்.