தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசர் வீடியோ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படத்தில் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி ஜூலை 28-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.