இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்டோரி என்ற படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை நீரஜ் பாண்டே இயக்க மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் எம்.எஸ் தோனியாக நடித்திருந்தார். அதன்பிறகு கியாரா அத்வானி, திசாபதானி மற்றும் பூமிகா போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள்.

வரவேற்பையும் வசூலையும் பெற்ற எம்.எஸ். தோனி திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் மே 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகும் என படக் குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.